தொடர்ந்து படிக்கread this section continuously
அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்நுணங்கற் றிருத்தல் கால்வேகம் நுந்தலே.
உரைmeaning
உற்றார் உறவினர் சுற்றத்தார் ஆகியோரை விட்டு நீங்கி இருப்பதும், பணிவைத் தருகின்ற உண்மையான கல்வியால் வருகின்ற ஞானத்தை அதிகமாகக் கொண்டிருப்பதும், எதையும் முணுமுணுக்காமல் உண்மையான மௌனத்தோடு அடங்கிக் கிடக்கும் சித்தர்கள் எண்ணத்தால் போதித்தவற்றைத் தமக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருப்பதும், உலக விஷயங்களில் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட மனதைக் கொண்டு எப்போதும் மூச்சுக்காற்றைத் தமக்குள்ளேயே வேகமாக ஏற்றி இறக்கித் தியானத்தில் இருப்பதும் சித்தர்களின் செயல்களாகும் என்கிறது பாடல்.
The verse says that these are the acts of siddhars: staying apart from kin, relatives and one's own circle; carrying the wisdom that comes from true learning, which brings humility; listening within oneself, without muttering, to what silent siddhars have taught by thought alone, remaining in true silence; and, with a mind gathered to one point and not straying after worldly matters, always drawing the breath swiftly in and out within oneself, remaining in meditation.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உற்றார் உறவினர் சுற்றத்தார் ஆகியோரை விட்டு நீங்கி இருப்பதும்,
Staying apart from kin, relatives and one's own circle,
- வரி 2Line 2
பணிவைத் தருகின்ற உண்மையான கல்வியால் வருகின்ற ஞானத்தை அதிகமாகக் கொண்டிருப்பதும்,
carrying the wisdom that comes from true learning, which brings humility,
- வரி 3Line 3
எதையும் முணுமுணுக்காமல் உண்மையான மௌனத்தோடு அடங்கிக் கிடக்கும் சித்தர்கள் எண்ணத்தால் போதித்தவற்றைத் தமக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருப்பதும்,
listening within oneself, without muttering, to what silent siddhars have taught by thought alone, remaining in true silence,
- வரி 4Line 4
உலக விஷயங்களில் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட மனதைக் கொண்டு எப்போதும் மூச்சுக்காற்றைத் தமக்குள்ளேயே வேகமாக ஏற்றி இறக்கித் தியானத்தில் இருப்பதும் சித்தர்களின் செயல்களாகும் என்கிறது பாடல்.
and, with a mind gathered to one point and not straying after worldly matters, always drawing the breath swiftly in and out within oneself, remaining in meditation, these, the verse says, are the acts of siddhars.
திருமந்திரம் பாடல் #705





