தொடர்ந்து படிக்கread this section continuously
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்துந்திச் சமாதி யுடையொளி யோகியே.
உரைmeaning
சந்திரகலையாகிய இடகலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும், சூரியகலையாகிய பிங்கலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும், சுழுமுனை நாடி வழியே மேலே சென்று சிவபெருமான் இருக்கும் சகஸ்ரதளத்தில் இணைவதை, புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் பார்த்து அதிலேயே லயித்து, தன்னுடல் மேலும் இந்த உலகத்தின் மேலும் உள்ள பற்றுக்களை அறுத்து, பேரொளியாகிய இறைவனையே நினைத்துச் சமாதி நிலையில் இருப்பவர்கள் சிவ யோகியர்கள் ஆவார்கள் என்கிறது பாடல்.
The breath that moves through idakalai, the moon channel, and the breath that moves through pingalai, the sun channel, rise through sushumna and join in the sahasrara where Sivan dwells. The verse says that those who behold this joining at the ājñā chakra between the brows and dissolve there, cutting off attachment to their own body and to this world, thinking only of God who is the great light, and remaining in that state of samadhi, are Siva yogis.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சந்திரகலையாகிய இடகலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும், சூரியகலையாகிய பிங்கலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும்,
The breath that moves through idakalai, the moon channel, and the breath that moves through pingalai, the sun channel,
- வரி 2Line 2
சுழுமுனை நாடி வழியே மேலே சென்று சிவபெருமான் இருக்கும் சகஸ்ரதளத்தில் இணைவதை,
rise through sushumna and join in the sahasrara where Sivan dwells.
- வரி 3Line 3
புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் பார்த்து அதிலேயே லயித்து, தன்னுடல் மேலும் இந்த உலகத்தின் மேலும் உள்ள பற்றுக்களை அறுத்து,
The verse says that those who behold this joining at the ājñā chakra between the brows and dissolve there, cutting off attachment to their own body and to this world,
- வரி 4Line 4
பேரொளியாகிய இறைவனையே நினைத்துச் சமாதி நிலையில் இருப்பவர்கள் சிவ யோகியர்கள் ஆவார்கள்.
thinking only of God who is the great light and remaining in that state of samadhi, are Siva yogis.
திருமந்திரம் பாடல் #704





