திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 703

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிடஎட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

உரை

உயிரின் உடலாகிய தேருக்கு ஆறு ஆதாரச் சக்கரங்கள் உள்ளன. இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களின் வழியே சக்தியூட்டப்பட்ட வாயு, ஏழாவது ஆதாரமான சகஸ்ரதளத்திற்குச் சென்று, அங்கிருக்கும் இறைசக்தியோடு கலந்தபின் உருவாகின்ற அமிர்தம், அங்கிருந்து கீழிறங்கி எட்டாவது இடமாகிய உள் நாக்கிற்கு மேலே வந்து விழுகின்றது. இவ்வாறு விழுகின்ற அமிர்தத்தைப் பருகிக்கொண்டே பேரின்பத்தில் திளைத்திருக்கும்போது, மாபெரும் நிலம் போன்ற உடலின் ஒன்பது துவாரங்களும் மூச்சுக்காற்றோடு இணைந்திருக்கும் என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிரின் உடலாகிய தேருக்கு ஆறு ஆதாரச் சக்கரங்கள் உள்ளன.

  • வரி 2

    இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களின் வழியே சக்தியூட்டப்பட்ட வாயு, ஏழாவது ஆதாரமான சகஸ்ரதளத்திற்குச் சென்று, அங்கிருக்கும் இறைசக்தியோடு கலந்தபின்,

  • வரி 3

    உருவாகின்ற அமிர்தம் அங்கிருந்து கீழிறங்கி எட்டாவது இடமாகிய உள் நாக்கிற்கு மேலே வந்து விழுகின்றது.

  • வரி 4

    இவ்வாறு விழுகின்ற அமிர்தத்தைப் பருகிக்கொண்டே பேரின்பத்தில் திளைத்திருக்கும்போது, மாபெரும் நிலம் போன்ற உடலின் ஒன்பது துவாரங்களும் மூச்சுக்காற்றோடு இணைந்திருக்கும் என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #703

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout