திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 702

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்எழுகின்ற வாயு இடமது சொல்லில்எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

உரை

பாடல் #700 இல் உள்ளபடி மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் ஓர் பங்கு மூச்சுக்காற்று கலக்கும். அந்த மூச்சுக்காற்று எழும் இடத்தைச் சொன்னால், எழுநூற்று இருபத்தொன்பது நாடிகள் வழியாக, நான்கு இதழ்களைக் கொண்ட மூலாதாரச் சக்கரத்தின் அக்கினியோடு இருந்தவாறே ஆரம்பிக்கின்றது என்கிறது பாடல். பாடல் #701 இல் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தோடு மூச்சுக்காற்று கலக்கும் விதத்தைச் சொன்ன திருமூலர், இப்பாடலில் கீழே இருக்கும் மூலாதார சக்கரத்தில் மூச்சுக்காற்று கலக்கும் விதத்தைக் கூறுகிறார்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #700 இல் உள்ளபடி மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் ஓர் பங்கு மூச்சுக்காற்று கலக்கும்.

  • வரி 2

    அந்த மூச்சுக்காற்று எழும் இடத்தைச் சொன்னால், எழுநூற்று இருபத்தொன்பது நாடிகள் வழியாக,

  • வரி 3

    நான்கு இதழ்களைக் கொண்ட மூலாதாரச் சக்கரத்தின் அக்கினியோடு இருந்தவாறே ஆரம்பிக்கின்றது.

  • வரி 4

    பாடல் #701 இல் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தோடு மூச்சுக்காற்று கலக்கும் விதத்தைச் சொன்ன திருமூலர், இப்பாடலில் கீழே இருக்கும் மூலாதார சக்கரத்தில் மூச்சுக்காற்று கலக்கும் விதத்தைக் கூறுகிறார்.

திருமந்திரம் பாடல் #702

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout