திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 701

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

இருநிதி யாகிய எந்தை யிடத்துஇருநிதி வாயு இயங்கு நெறியில்இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.

உரை

பாடல் #700 இல் உள்ளபடி சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் நம் தந்தையாகிய இறைவனிடம் சென்று சேரும் ஒரு பங்கு காற்றின் அளவு, உயிர்களின் உடலில் இருக்கும் இருநூற்று முப்பத்து மூன்று நாடிகளில் பரவிச் சென்று, சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரை மலரச் செய்து சங்கமமாகிவிடுகின்றது. சங்கமமானதும், நமசிவாய என்னும் ஐந்து எழுத்து மந்திரமாய் சகஸ்ரதளத்தை இயக்குகிறது என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #700 இல் உள்ளபடி சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் நம் தந்தையாகிய இறைவனிடம் சென்று சேரும் ஒரு பங்கு காற்றின் அளவு,

  • வரி 2

    உயிர்களின் உடலில் இருக்கும் இருநூற்று முப்பத்து மூன்று நாடிகளில் பரவிச் சென்று,

  • வரி 3

    சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரை மலரச் செய்து சங்கமமாகிவிடுகின்றது.

  • வரி 4

    சங்கமமானதும், நமசிவாய என்னும் ஐந்து எழுத்து மந்திரமாய் சகஸ்ரதளத்தை இயக்குகிறது என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #701

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout