திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 699

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்முன்னுறும் ஐம்பத்தொ டொன்றுடன் அஞ்சுமாய்முன்னுறு வாயுவின் முடிவகை யாமே.

உரை

தலையுச்சியின் முன்னே வீற்றிருக்கும் இறைசக்தியுடன், கீழிருந்து மேலெழுந்து சென்ற மூச்சுக்காற்று ஒன்றாகச் சேர்ந்து கலக்கும் விதத்தைச் சொன்னால், அடியிலிருந்து சுழுமுனை நாடி வழியே மேலெழும்பும் வாயு, உயிர்சக்தியாகிய குண்டலினியை எழுப்பி, மூலாதாரத்திலிருந்து ஒவ்வொரு சக்கரங்களாக, அவற்றின் ஐம்பத்தொரு இதழ்களின் வழியே சக்தியூட்டி (பாடல் #696 இல் கொடுத்துள்ளபடி), ஐந்து புலன்களுக்கும் செயல் திறனை அளித்து, மொத்தமாய் மேலே சென்று அங்கிருக்கும் சகஸ்ரார தளத்தில் முடிவடைகின்றது. உயிர்சக்தி அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கும் முறை இதுவே என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    தலையுச்சியின் முன்னே வீற்றிருக்கும் இறைசக்தியுடன், கீழிருந்து மேலெழுந்து சென்ற மூச்சுக்காற்று ஒன்றாகச் சேர்ந்து கலக்கும் விதத்தைச் சொன்னால்,

  • வரி 2

    அடியிலிருந்து சுழுமுனை நாடி வழியே மேலெழும்பும் வாயு, உயிர்சக்தியாகிய குண்டலினியை எழுப்பி,

  • வரி 3

    மூலாதாரத்திலிருந்து ஒவ்வொரு சக்கரங்களாக, அவற்றின் ஐம்பத்தொரு இதழ்களின் வழியே சக்தியூட்டி (பாடல் #696 இல் கொடுத்துள்ளபடி), ஐந்து புலன்களுக்கும் செயல் திறனை அளித்து,

  • வரி 4

    மொத்தமாய் மேலே சென்று அங்கிருக்கும் சகஸ்ரார தளத்தில் முடிவடைகின்றது; உயிர்சக்தி அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கும் முறை இதுவே என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #699

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout