தொடர்ந்து படிக்கread this section continuously
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகிஅஞ்சுடன் அஞ்சது வாயுத மாவதுஅஞ்சது வன்றி இரண்டது வாயிரம்அஞ்சது காலம் எடுத்தருளும் ஒன்றே.
உரைmeaning
பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்டிருக்கும் சதாசிவசக்திக்கு, உயிரின் மூச்சுக்காற்றுடன் உடலில் இருக்கும் பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாகும். இந்தப் பத்து ஆயுதங்களும், கீழே பார்த்த சகஸ்ரதளம் மேலே பார்த்த சகஸ்ரதளம் என்று இரண்டு வடிவங்களாக இருக்கும் அச் சக்தியுடன், உருவமற்ற நிலையிலும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலராகிய சகஸ்ரார தளத்திலும் என்றும் ஒடுங்கியிருந்து, பலகாலங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்க வைத்து அருளுவது, சதாசிவமூர்த்தியாகிய ஒரு சக்தியே என்கிறது பாடல்.
To Sadasiva shakti, who has the ten directions as her ten faces, the ten winds that dwell in the body along with the soul's own breath serve as her ten weapons. These ten weapons, together with that power in her two forms, the sahasrara looked at from below and the sahasrara looked at from above, remain forever gathered, whether formless or as the thousand-petalled lotus of the sahasrara, keeping one steeped in bliss for many ages. It is Sadasivamurthy, this one power alone, the verse says, who grants this.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்டிருக்கும் சதாசிவசக்திக்கு,
To Sadasiva shakti, who has the ten directions as her ten faces,
- வரி 2Line 2
உயிரின் மூச்சுக்காற்றுடன் உடலில் இருக்கும் பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாகும்.
the ten winds that dwell in the body along with the soul's own breath serve as her ten weapons.
- வரி 3Line 3
இந்தப் பத்து ஆயுதங்களும், கீழே பார்த்த சகஸ்ரதளம் மேலே பார்த்த சகஸ்ரதளம் என்று இரண்டு வடிவங்களாக இருக்கும் அச் சக்தியுடன், உருவமற்ற நிலையிலும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலராகிய சகஸ்ரார தளத்திலும் என்றும் ஒடுங்கியிருந்து,
These ten weapons, together with that power in her two forms, the sahasrara looked at from below and from above, remain forever gathered, whether formless or as the thousand-petalled lotus of the sahasrara,
- வரி 4Line 4
பலகாலங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்க வைத்து அருளுவது, சதாசிவமூர்த்தியாகிய ஒரு சக்தியே என்கிறது பாடல்.
keeping one steeped in bliss for many ages; it is Sadasivamurthy, this one power alone, the verse says, who grants this.
திருமந்திரம் பாடல் #697





