திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 695

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுளஆறது வாயிர மாகு மருவழிஆறது வாக வளர்ப்ப திரண்டே.

உரை

தலைக்குள் ஆறு போல் உண்டாகும் அமுதம், ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புத் தொகுதிகள் வழியாகச் செல்கின்றது. அவ்வாறு செல்லும் அமுதம் அந்த நரம்புத் தொகுதிகளின் மறுபகுதியில் உள்ள சகஸ்ரதளத்தை அடைந்து, உயிரைப் பக்குவப்படுத்தி மேல்நிலைக்குக் கொண்டு செல்வது சிவசத்திகளே என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    தலைக்குள் ஆறு போல் உண்டாகும் அமுதம்,

  • வரி 2

    ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புத் தொகுதிகள் வழியாகச் செல்கின்றது.

  • வரி 3

    அவ்வாறு செல்லும் அமுதம் அந்த நரம்புத் தொகுதிகளின் மறுபகுதியில் உள்ள சகஸ்ரதளத்தை அடைந்து,

  • வரி 4

    உயிரைப் பக்குவப்படுத்தி மேல்நிலைக்குக் கொண்டு செல்வது சிவசத்திகளே என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #695

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout