தொடர்ந்து படிக்கread this section continuously
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்காலது அக்கொடி நாயகி தன்னுடன்காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்காலது வேமண்டிக் கொண்டஇவ் வாறே.
உரைmeaning
மூச்சுக்காற்றோடு உயிர் கலக்கும் முறை என்னவென்றால், உடம்பில் மொத்தமுள்ளதாக யோக நூல்கள் கூறும் எழுபதாயிரம் நாடிகளில் ஐந்நூறு நாடிகள் சிறப்பானவை. இவற்றில் பத்து நாடிகள் மிகவும் சிறப்பானவை (பாடல் #595 இல் உள்ளபடி). அதிலும் சிறப்பானவை இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள். இந்த ஐநூற்றுப் பதிமூன்று நாடிகளும் சுழுமுனை நாடியில் இருக்கும் சிவசக்தியோடு கலந்திருந்தால், மூச்சுக்காற்றோடு உயிர் கலந்திருக்கும் என்கிறது பாடல்.
The way breath and life come to mingle, the verse says, is this: of the seventy thousand nadis that the yoga texts say exist in all in the body, five hundred are the finer ones. Of these, ten are the most special of all (as at Padal 595). And finest of all are the three, idakalai, pingalai and sushumna. If these five hundred and thirteen nadis together stay mingled with the Siva power that dwells in the sushumna, then breath stays mingled with life.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மூச்சுக்காற்றோடு உயிர் கலக்கும் முறை என்னவென்றால்,
The way breath and life come to mingle, the verse says, is this:
- வரி 2Line 2
உடம்பில் மொத்தமுள்ளதாக யோக நூல்கள் கூறும் எழுபதாயிரம் நாடிகளில் ஐந்நூறு நாடிகள் சிறப்பானவை; இவற்றில் பத்து நாடிகள் மிகவும் சிறப்பானவை (பாடல் #595 இல் உள்ளபடி),
of the seventy thousand nadis the yoga texts say exist in the body, five hundred are the finer ones, and of these ten are the most special (as at Padal 595),
- வரி 3Line 3
அதிலும் சிறப்பானவை இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள்.
and finest of all are the three, idakalai, pingalai and sushumna.
- வரி 4Line 4
இந்த ஐநூற்றுப் பதிமூன்று நாடிகளும் சுழுமுனை நாடியில் இருக்கும் சிவசக்தியோடு கலந்திருந்தால், மூச்சுக்காற்றோடு உயிர் கலந்திருக்கும்.
If these five hundred and thirteen nadis together stay mingled with the Siva power in the sushumna, then breath stays mingled with life.
திருமந்திரம் பாடல் #694





