திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 692

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

நாயக மாகிய நல்லொளி கண்டபின்தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்போயக மான புவனங்கள் கண்டபின்பேயக மாகிய பேரொளி காணுமே.

உரை

பாடல் #691 இல் உள்ளபடி சதாசிவமாகிய ஒளியை உணர்ந்தபின், ஆன்மாவின் பிறப்பிடமாகிய சதாசிவம் தமக்குள்ளேயே தழைத்து இருக்கும். உலகப் பற்றுகள் அனைத்தும் தம்மை விட்டு விலகுவதை உணர்ந்தபின், தமக்குள் இருக்கும் இருள் அனைத்தையும் விலக்கும் பேரொளியைக் காணலாம் என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    பாடல் #691 இல் உள்ளபடி சதாசிவமாகிய ஒளியை உணர்ந்தபின்,

  • வரி 2

    ஆன்மாவின் பிறப்பிடமாகிய சதாசிவம் தமக்குள்ளேயே தழைத்து இருக்கும்.

  • வரி 3

    உலகப் பற்றுகள் அனைத்தும் தம்மை விட்டு விலகுவதை உணர்ந்தபின்,

  • வரி 4

    தமக்குள் இருக்கும் இருள் அனைத்தையும் விலக்கும் பேரொளியைக் காணலாம் என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #692

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout