திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 689

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்மைய தாகத் தழைத்த பகலவன்மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்பொன்மைய தாகப் புலன்களும் போயிடநன்மைய தாகிய நற்கொடி காணுமே.

உரை

ஒரு சித்தியைப் பெற்று சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் விளங்கும் யோகி, அனைத்திற்கும் மேலான உண்மைப் பொருளாகிய சதாசிவத்தைத் தரிசித்தபின், உலகப் பற்றை விட்டதைப் போலவே உடலின் ஐம்புலன்களின் பற்றையும் விட்டுவிட்டால், நன்மை தரும் சதாசிவத்தின் சக்தியைத் தரிசிக்கலாம் என்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    ஒரு சித்தியைப் பெற்று சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் விளங்கும் யோகி,

  • வரி 2

    அனைத்திற்கும் மேலான உண்மைப் பொருளாகிய சதாசிவத்தைத் தரிசித்தபின்,

  • வரி 3

    உலகப் பற்றை விட்டதைப் போலவே உடலின் ஐம்புலன்களின் பற்றையும் விட்டுவிட்டால்,

  • வரி 4

    நன்மை தரும் சதாசிவத்தின் சக்தியைத் தரிசிக்கலாம் என்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #689

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout