தொடர்ந்து படிக்கread this section continuously
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெலாந்தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.
உரைmeaning
பாடல் 687 இல் உணரப்பட்ட உண்மைப் பொருளான சதாசிவம் எது என்று பார்த்தால், அது நல்ல வசித்துவம் என்னும் சித்தியாகும். அவ்வாறு வசித்துவம் என்னும் சித்தியை அடைந்தவர்கள், தமது உயிர் எது என்று உணர்ந்தது போலவே எல்லா உயிர்களையும் உணர்ந்து, தாமே சிவமாகி, அந்த உயிர்களோடு கலந்து இருப்பார்கள்.
As to what that true being, Sadashiva, realized in verse 687, actually is, it is the good siddhi called vasitvam. Those who attain the siddhi of vasitvam come to know every living being just as they know their own life, and themselves becoming Shiva, remain mingled with those beings.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உணரப்பட்ட அந்த உண்மைப் பொருள் எது என்று வினவினால்,
If one asks what that true being which came to be actually is,
- வரி 2Line 2
அது நற்பொருளாகிய நல்ல வசித்துவம் என்னும் சித்தியேயாகும்.
it is the good and true treasure, the siddhi vasitvam.
- வரி 3Line 3
தமது கைப்பொருள் போலக் கருதிக் கலந்து நிற்கும் எல்லா உயிர்களுக்கும்,
To every living being, held as one's own and mingled with,
- வரி 4Line 4
தமது உயிரின் தன்மையே ஆகிய அத்தன்மையனாகத் தாமும் ஆகிவிடுவார்.
one becomes of that same nature, the very being of one's own self.
திருமந்திரம் பாடல் #688





