தொடர்ந்து படிக்கread this section continuously
போவதொன் றில்லை வருவது தானில்லைசாவதொன் றில்லை தழைப்பது தானில்லைதாமத மில்லை தமரகத் தின்னொளியாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.
உரைmeaning
கரிமா சித்தி பெற்றவர்களுக்குக் காலங்கள் அழிவதும் இல்லை, புதிதாக வருவதும் இல்லை. இறப்பும் இல்லை, ஆகவே பிறப்பும் இல்லை. அவர்கள் எப்போதும் நிகழ்காலத்திலேயே தமக்குள் இருக்கும் ஒளியுடன் லயித்து, எதனாலும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.
For those who have gained the siddhi of karimā, times neither pass away nor newly arrive. There is no dying, and so there is no being born either. They remain always in the present moment, absorbed in the light that dwells within them, untouched by anything.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கழிந்து போவது ஒன்றும் இல்லை, புதிதாக வருவதும் இல்லை.
There is no passing away, and no new arriving either,
- வரி 2Line 2
இறப்பு இல்லை, ஆகவே புதுப் பிறவியாய்த் தழைப்பதும் இல்லை.
no dying, and so no flourishing into a new birth,
- வரி 3Line 3
தாமதமும் இல்லை; தமக்குள்ளேயே இருக்கும் இனிய ஒளியே,
no delay either, for the sweet light within one's own self
- வரி 4Line 4
அறிந்துகொள்பவர்களுக்கு எல்லாமாக இருக்கிறது.
is all there is, for those who have come to know it.
திருமந்திரம் பாடல் #681





