திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 676

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.

உரை

அணிமாவும் இலகிமாவும் கிடைத்தபின், உண்மை ஞானமாகிய பேரறிவை உணர்த்தும் அருள் சக்தியுடன், தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடன் கலந்து ஒரு வருடம் இருந்தால், மாயை விலகி மறைந்திருந்த மகிமா என்னும் சித்தி கிடைக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    மெய்ப்பொருளை உணர்த்திய அந்த மெல்லியலாளுடனும்,

  • வரி 2

    தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடனும்,

  • வரி 3

    தமதாகவே கொண்டு ஒரு வருடம் கலந்திருந்தால்,

  • வரி 4

    மறைந்திருந்த செல்வமாகிய மகிமா என்னும் சித்தி கிடைக்கும்.

திருமந்திரம் பாடல் #676

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout