தொடர்ந்து படிக்கread this section continuously
மாலகு வாகிய மாயனைக் கண்டபின்தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றதுமேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.
உரைmeaning
இலகிமா என்னும் சித்தி கிடைத்து இறைவனைத் தரிசித்தபின், தாமே ஒளி உடலாக மாறி, அவ்வொளி உடலோடு பாலைப் போன்ற வெண்மையான ஒளியாகி, எங்கும் பரந்திருக்கும் பேரொளியாய் உள்ள உண்மைப் பொருளான இறைவனைத் தரிசிக்கலாம்.
Having attained the siddhi of ilakimā and beheld God, one turns into a body of light, and with that body of light, becoming a whiteness like milk, one may behold God, the true being who stands as the great light spread out everywhere.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இலகிமாவாகவே இருக்கும் மாபெரும் மாயனைத் தரிசித்தபின்,
Having beheld the great Mayan who is ilakimā itself,
- வரி 2Line 2
தாமே ஒளியாகி, அங்கே ஒளியாய்த் தழைத்திருப்பார்.
one turns into light and flourishes there as light.
- வரி 3Line 3
பாலைப் போன்ற வெண்ணிற ஒளியாகி எங்கும் பரந்து நின்று,
Becoming a milk-white light spread out everywhere,
- வரி 4Line 4
ஒளிகளுக்கெல்லாம் மேலான ஒளியாய் உள்ள மெய்ப்பொருளைத் தரிசிப்பார்.
one beholds the true being who is the light above all lights.
திருமந்திரம் பாடல் #675





