தொடர்ந்து படிக்கread this section continuously
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்வீங்கிய வாதமுங் கூனும் முடமதாய்வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.
உரைmeaning
வயிற்றுக் கட்டி அல்லது வீக்கம், சிரங்கு, குட்டம், உறுப்புகள் வீக்கம், பலவகைச் சோகைகள், வாதம் (நரம்புத் தளர்ச்சி), கூனுதல், முடமாதல், கண் நோய்கள் ஆகிய வியாதிகள் உடலிலுள்ள தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் உருவாகும்.
Swelling of the belly, boils, skin disease, swelling of the limbs, various kinds of anemia, palsy that is a weakening of the nerves, a bent back, lameness, and eye disease: these afflictions arise when the breath called Dhananjaya within the body decreases.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
வயிற்றுக் கட்டி அல்லது வீக்கம், சிரங்கு, குட்டம்,
Swelling of the belly, boils, and skin disease,
- வரி 2Line 2
உறுப்புகள் வீக்கம், பலவகைச் சோகைகள்,
swelling of the limbs, and various kinds of anemia,
- வரி 3Line 3
வாதம், கூனுதல், முடமாதல்,
palsy, a bent back, and lameness,
- வரி 4Line 4
கண் நோய்கள் ஆகிய இவ்வியாதிகள் தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் உருவாகும்.
and eye disease: these afflictions arise when the breath called Dhananjaya decreases.
திருமந்திரம் பாடல் #655





