தொடர்ந்து படிக்கread this section continuously
சித்தந் திரிந்து சிவமய மாகியேமுத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்சித்தம் பரத்தில் திருநடத் தோரே.
உரைmeaning
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் ஆகிய ஐம்புலன்களில் செல்லும் எண்ணங்கள் எல்லாம் சிவமாய் உணர்ந்து, முக்தி நிலையை அறிந்து அதிலேயே லயித்திருப்பவர்கள் சிவமுக்தர்கள் ஆவார்கள். இவர்கள் ஐந்து புலன்களின் உணர்வுடன் தொடர்பற்றவர்கள் ஆகையால் தூய நிலையை அடைந்து, அவர்களின் எண்ணம் சிவனோடு ஒன்றுபட்டு ஆனந்த நிலையில் நடனம் ஆடும்.
Those whose thoughts, wherever they go among the five senses, sight, hearing, taste, smell and touch, come to feel all as Shiva, and who know the state of liberation and remain dissolved in it, become Shiva-muktas. Because they have no connection with the awareness of the five senses, they attain the pure state, and their thought, united with Shiva, dances in the state of bliss.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் ஆகிய ஐம்புலன்களில் செல்லும் எண்ணங்கள் எல்லாம் சிவமாய் உணரப்படும்.
Thoughts, wherever they go among the five senses, sight, hearing, taste, smell and touch, come to be felt as Shiva.
- வரி 2Line 2
முக்தி நிலையை அறிந்து அதிலேயே லயித்திருப்பவர்கள் சிவமுக்தர்கள் ஆவார்கள்.
Those who know the state of liberation and remain dissolved in it become Shiva-muktas.
- வரி 3Line 3
ஐந்து புலன்களின் உணர்வுடன் தொடர்பற்றவர்கள் ஆகையால் தூய நிலையை அடைவார்கள்.
Because they have no connection with the awareness of the five senses, they attain the pure state.
- வரி 4Line 4
அவர்களின் எண்ணம் சிவனோடு ஒன்றுபட்டு ஆனந்த நிலையில் நடனம் ஆடும்.
Their thought, united with Shiva, dances in the state of bliss.
திருமந்திரம் பாடல் #652





