தொடர்ந்து படிக்கread this section continuously
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லையாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்கோங்கி வரமுத்தி முந்திய வாறே.
உரைmeaning
சிவயோகியாக ஆகி அணு அளவாக மாறினாலும், பல உயிர்களைத் தாங்கும் தன்மையைப் பெறுவார். அவ்வுயிர்களைத் தம்முள் கலந்துகொண்ட போதும், தமக்குள் எந்த மாற்றமும் இல்லை. தமக்குள் இருக்கும் அவ்வுயிர்கள் ஓம் எனும் நாதமாக எழுந்து உச்சிக்குச் சென்று முக்தி பெறுகின்றன.
Becoming a Shiva yogi, even while changing to the measure of an atom, one gains the power to bear many lives within oneself. Though those lives are merged within him, there is no change at all within himself. The lives that dwell within him rise as the sound Om and go to the crown, and attain liberation there.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சிவயோகியாக ஆகி அணு அளவாக மாறினாலும், பல உயிர்களைத் தாங்கும் தன்மையைப் பெறுவார்.
Becoming a Shiva yogi, even while changing to the measure of an atom, one gains the power to bear many lives within oneself.
- வரி 2Line 2
அவ்வுயிர்களைத் தம்முள் கலந்துகொண்ட போதும், தமக்குள் எந்த மாற்றமும் இல்லை.
Though those lives are merged within him, there is no change at all within himself.
- வரி 3Line 3
தமக்குள் இருக்கும் அவ்வுயிர்கள் ஓம் எனும் நாதமாக எழுகின்றன.
The lives that dwell within him rise as the sound Om.
- வரி 4Line 4
அவை உச்சிக்குச் சென்று முக்தி பெறுகின்றன.
They go to the crown and attain liberation there.
திருமந்திரம் பாடல் #650





