தொடர்ந்து படிக்கread this section continuously
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்திசீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்ஏரொன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.
உரைmeaning
பாடல்கள் #644, #645, #646-ல் உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடித்து வந்தால், பத்தாம் ஆண்டில் தியானத்திலிருக்கும் சிவ நிலையை அடையலாம். பதினோராம் ஆண்டில் எட்டுவித சித்திகளும் கிடைக்கும். பன்னிரண்டாம் ஆண்டில் மேலிருக்கும் ஏழு உலகங்களுக்கும் கீழிருக்கும் ஏழு உலகங்களுக்கும் சென்று, எங்கும் இடம் விடாமல் பரந்திருக்கும் நிலையை அடையலாம்.
For one who continues to practice any of the ways given in verses 644, 645 and 646, in the tenth year the state of being Shiva while in meditation can be attained. In the eleventh year the eight siddhis are gained. In the twelfth year one can go to the seven worlds above and the seven worlds below and attain the state of pervading everywhere without leaving any place untouched.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல்கள் #644, #645, #646-ல் உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடித்து வந்தால் பத்தாம் ஆண்டில் தியானத்திலிருக்கும் சிவ நிலையை அடையலாம்.
For one who continues to practice any of the ways given in verses 644, 645 and 646, in the tenth year the state of being Shiva while in meditation can be attained.
- வரி 2Line 2
பதினோராம் ஆண்டில் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.
In the eleventh year the eight siddhis are gained.
- வரி 3Line 3
பன்னிரண்டாம் ஆண்டில் மேலிருக்கும் ஏழு உலகங்களுக்கும் கீழிருக்கும் ஏழு உலகங்களுக்கும் சென்று,
In the twelfth year one can go to the seven worlds above and the seven worlds below,
- வரி 4Line 4
எங்கும் இடம் விடாமல் பரந்திருக்கும் நிலையை அடையலாம்.
and attain the state of pervading everywhere without leaving any place untouched.
திருமந்திரம் பாடல் #648





