திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 646

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்நீடுந் துரங்கேட்டல் நீண்முடி வீராறே.

உரை

எண்ணிலடங்காத நோய்கள் போன்ற பிறவிகளில் நம்மைச் சூழ்ந்து பற்றிக்கொண்டிருக்கும் உறவுகளாலும், நிலைத்திருக்கும் கலை உணர்வுகளாலும், அந்த உணர்வுகளைத் தரும் கல்விகளாலும், அந்தக் கல்விகளால் வரும் தெளிவாலும், அந்தத் தெளிவால் பெறப்படும் நுட்பமான உணர்வுகளாலும், அவற்றால் அடையும் பெருமைகளாலும் எட்டுவித சித்திகளும் கிடைப்பதில்லை. பன்னிரண்டு ஆண்டுகள் ஆத்மகுரு கூறிய வழியைக் கேட்டு அதன்படி பொறுமையுடன் நடந்துவந்தால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    எண்ணிலடங்காத நோய்கள் போன்ற பிறவிகளில் நம்மைச் சூழ்ந்து பற்றிக்கொண்டிருக்கும் உறவுகளாலும்,

  • வரி 2

    நிலைத்திருக்கும் கலை உணர்வுகளாலும், அவற்றைத் தரும் கல்விகளாலும், அந்தக் கல்விகளால் வரும் தெளிவு மற்றும் நுட்பமான உணர்வுகளாலும்,

  • வரி 3

    அவற்றால் அடையும் பெருமைகளாலும் எட்டுவித சித்திகளும் கிடைப்பதில்லை.

  • வரி 4

    பன்னிரண்டு ஆண்டுகள் ஆத்மகுரு கூறிய வழியைக் கேட்டு அதன்படி பொறுமையுடன் நடந்துவந்தால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

திருமந்திரம் பாடல் #646

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout