தொடர்ந்து படிக்கread this section continuously
காயாதி பூதங் கலைகால மாயையில்ஆயா தகல அறிவொன் றனாதியேஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்வீயாப் பரகாயம் மேவலு மாமே.
உரைmeaning
ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களிலும், அறுபத்து நான்கு கலைகளிலும், மூன்று காலங்களிலும் (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்), மாயை ஆகிய தத்துவங்களிலும் சேராமல் விலகி ஒன்றுபட்டிருக்கும் அறிவை, ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையேயுள்ள தொடர்பாக உண்மையென அறிந்து அதிலேயே கலந்திருந்தால், என்றும் அழியாத உடலை அடையலாம்.
The awareness that stands apart, joined to none of the five elements, ether, earth, water, air and fire, none of the sixty-four kalas, none of the three times, past, present and future, and none of maya, if one knows it truly as the bond between the self and the Supreme Self and remains merged in it, one can attain a body that never perishes.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களிலும், அறுபத்து நான்கு கலைகளிலும், மூன்று காலங்களிலும், மாயையிலும்,
In the five elements, ether, earth, water, air and fire, in the sixty-four kalas, in the three times, and in maya,
- வரி 2Line 2
சேராமல் விலகி ஒன்றுபட்டிருக்கும் தொடக்கமில்லாத அறிவு ஒன்று உண்டு.
there is one beginningless awareness that stands apart, joined to none of these.
- வரி 3Line 3
அந்த அறிவை ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையேயுள்ள தொடர்பாக உண்மையென அறிந்து அதிலேயே கலந்திருந்தால்,
If one knows that awareness truly as the bond between the self and the Supreme Self, and remains merged in it,
- வரி 4Line 4
என்றும் அழியாத உடலை அடையலாம்.
one can attain a body that never perishes.
திருமந்திரம் பாடல் #643





