திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 640

மூன்றாம் தந்திரம்11. அட்டமா சித்தி

தொடர்ந்து படிக்கread this section continuously

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானைஅணிந்தெண் திசையினும் அட்டமா சித்திதணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.

உரை

சிவபெருமானைத் தேடி எட்டுத் திசைகளிலும் பணிந்து, அவனே பரம்பொருள் என்று அறிந்ததால், தைரியமுடன் எட்டுத் திசைகளிலும் சிவத்தை வணங்க, அதனால் உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் தன் அருளால் எட்டு சித்திகளும் அவருக்குள் நிலைபெறச் செய்வார்.

வரி வாரியாக

  • வரி 1

    சிவபெருமானைத் தேடி எட்டுத் திசைகளிலும் பணிந்து,

  • வரி 2

    அவனே பரம்பொருள் என்று அறிந்ததால் தைரியமுடன் எட்டுத் திசைகளிலும் சிவத்தை வணங்க,

  • வரி 3

    அதனால் உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் எட்டு சித்திகளையும்,

  • வரி 4

    தன் அருளால் அவருக்குள் நிலைபெறச் செய்வார்.

திருமந்திரம் பாடல் #640

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout