தொடர்ந்து படிக்கread this section continuously
அறிவாயசத் தென்னு மாறா றகன்றுசெறிவான மாயை சிதைத்தரு ளாலேபிறியாத பேரரு ளாயிடும் பெற்றிநெறியான அன்பர் நிலையறிந் தாரே.
உரைmeaning
மனம் தியானத்தில் நிலைக்கப் பெற்றால் நிலையில்லாத முப்பத்தாறு தத்துவங்கள் நீங்குவதை உணரலாம். வலிமையான மாயை சிவனருளாலே அழியும். அந்த சிவபெருமானை விட்டு என்றும் பிரியாதிருக்கும் பேரருளைப் பெற்றிடலாம். தியானத்தின் வழியை விட்டு விலகாமல் செல்பவர்கள் இந்த நிலையை உணர்ந்திடலாம்.
If the mind comes to be established in meditation, one may perceive the departure of the thirty-six impermanent principles. The powerful illusion is destroyed by Shiva's grace. One may obtain the great grace that never again parts from that Shiva. Those who go on without straying from the path of meditation may perceive this state.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மனம் தியானத்தில் நிலைக்கப் பெற்றால் நிலையில்லாத முப்பத்தாறு தத்துவங்கள் நீங்குவதை உணரலாம்.
If the mind comes to be established in meditation, one may perceive the departure of the thirty-six impermanent principles.
- வரி 2Line 2
வலிமையான மாயை சிவனருளாலே அழியும்.
The powerful illusion is destroyed by Shiva's grace.
- வரி 3Line 3
அந்த சிவபெருமானை விட்டு என்றும் பிரியாதிருக்கும் பேரருளைப் பெற்றிடலாம்.
One may obtain the great grace that never again parts from that Shiva.
- வரி 4Line 4
தியானத்தின் வழியை விட்டு விலகாமல் செல்பவர்கள் இந்த நிலையை உணர்ந்திடலாம்.
Those who go on without straying from the path of meditation may perceive this state.
திருமந்திரம் பாடல் #617





