தொடர்ந்து படிக்கread this section continuously
சமாதிய மாதியிற் றான்சொல்லக் கேட்டிற்சமாதிய மாதியிற் றானெட்டுச் சித்திசமாதிய மாதியில் தங்கினோர்க் கன்றேசமாதிய மாதி தலைப்படுந் தானே.
உரைmeaning
அட்டாங்க யோகத்தில் கூறப்பட்ட இயமம் முதலான ஏழு யோகங்களையும் முறையாகச் செய்ய வேண்டும். அவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், எட்டாவது யோகமான சமாதியும் கைகூடும். அவ்வாறு கைகூடிவிட்டால், எட்டுவித சித்திகளும் கைவரப்பெறும்.
The seven limbs of yoga beginning with Yama that are spoken of in ashtanga yoga must be performed correctly. They must be kept to without fail. Doing so, the eighth limb, Samadhi, is also attained. Once that is attained, the eight kinds of siddhi too come into one's grasp.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அட்டாங்க யோகத்தில் கூறப்பட்ட இயமம் முதலான ஏழு யோகங்களையும் முறையாகச் செய்ய வேண்டும்.
The seven limbs of yoga beginning with Yama that are spoken of in ashtanga yoga must be performed correctly.
- வரி 2Line 2
அவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
They must be kept to without fail.
- வரி 3Line 3
அப்படிச் செய்தால், எட்டாவது யோகமான சமாதியும் கைகூடும்.
Doing so, the eighth limb, Samadhi, is also attained.
- வரி 4Line 4
அவ்வாறு கைகூடிவிட்டால், எட்டுவித சித்திகளும் கைவரப்பெறும்.
Once that is attained, the eight kinds of siddhi too come into one's grasp.
திருமந்திரம் பாடல் #618





