திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 619

தொடர்ந்து படிக்கread this section continuously

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்சந்தியி லான சமாதியிற் கூடிடும்அந்தமி லாத அறிவின் அரும்பொருள்சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.

உரை

சக்தியாகிய ஒளியையும் சிவமாகிய ஒலியையும் புருவ மத்தியில் ஒருமுகப்படுத்தி ஆழ்ந்திருந்தால், அட்டாங்க யோகத்தின் இறுதியான சமாதி கைகூடும். அவ்வாறு சமாதி நிலையை அடைந்துவிட்டால், அழிவில்லாத அறிவின் உண்மைப் பொருளான சிவம் அழகிய ஜோதியாய்த் தமக்குள்ளேயே தோன்றிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    சக்தியாகிய ஒளியையும் சிவமாகிய ஒலியையும் புருவ மத்தியில் ஒருமுகப்படுத்தி ஆழ்ந்திருந்தால்,

  • வரி 2

    அட்டாங்க யோகத்தின் இறுதியான சமாதி கைகூடும்.

  • வரி 3

    அவ்வாறு சமாதி நிலையை அடைந்துவிட்டால்,

  • வரி 4

    அழிவில்லாத அறிவின் உண்மைப் பொருளான சிவம் அழகிய ஜோதியாய்த் தமக்குள்ளேயே தோன்றிடும்.

திருமந்திரம் பாடல் #619

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout