தொடர்ந்து படிக்கread this section continuously
நடலித்த நாபிக்கு நால்விரல் மேலேமடலித்த வாணிக் கிருவிரல் உள்ளேகடலித் திருந்து கருதவல் லார்கள்சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.
உரைmeaning
தொப்புளுக்கும் நெஞ்சுக்குமிடையே உடலுக்குள் இருக்கும் இடத்தில் மனதை அங்கே ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து தியானம் செய்யக் கூடியவர்களுக்கு, அங்கே இருக்கும் உடலின் தலைவனான இறைவனை அறிய முடியும்.
Those able to fix the mind and meditate deeply upon the place within the body between the navel and the chest come to know the Lord who is the ruler of that body, dwelling there.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தொப்புளுக்கும் நெஞ்சுக்குமிடையே உடலுக்குள் இருக்கும் இடத்தில்,
At the place within the body between the navel and the chest,
- வரி 2Line 2
மனதை அங்கே ஒருமுகப்படுத்தி,
fixing the mind there,
- வரி 3Line 3
ஆழ்ந்து தியானம் செய்யக் கூடியவர்களுக்கு,
those who are able to meditate there deeply,
- வரி 4Line 4
அங்கே இருக்கும் உடலின் தலைவனான இறைவனை அறிய முடியும்.
come to know the Lord who is the ruler of that body, dwelling there.
திருமந்திரம் பாடல் #616





