தொடர்ந்து படிக்கread this section continuously
பள்ளி அறையிற் பகலே இருளில்லைகொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிதுவெள்ளி அறையில் விடிவில்லை தானே.
உரைmeaning
தியானம் செய்பவர்களுக்கு உள்ளம் ஒளிமயமாக இருக்கும்; அங்கே இருள் கிடையாது. அவர்களுக்கு மரணம் பற்றிய பயம் இருக்காது. இந்த நுண்ணறிவைப் பெற்ற யோகியர்கள் தங்களுக்குள் காணும் உள்ளொளி ஒரு யோசனை தூரம் பரவியிருக்கும். அந்த ஒளிமயமான வெள்ளி அறையாகிய மனத்தில் பயத்திற்கு இடமிருக்காது.
For those who meditate, the inner being is filled with light, and there is no darkness there. They will have no fear of death. For the yogis who have gained this subtle understanding, the inner light they see within themselves spreads to the distance of a yojana. In that luminous silver chamber that is the mind, there is no room for fear.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தியானம் செய்பவர்களுக்கு உள்ளம் ஒளிமயமாக இருக்கும், அங்கே இருள் கிடையாது.
For those who meditate, the inner being is filled with light, and there is no darkness there.
- வரி 2Line 2
அவர்களுக்கு மரணம் பற்றிய பயம் இருக்காது.
They will have no fear of death.
- வரி 3Line 3
இந்த நுண்ணறிவைப் பெற்ற யோகியர்கள் தங்களுக்குள் காணும் உள்ளொளி ஒரு யோசனை தூரம் பரவியிருக்கும்.
For the yogis who have gained this subtle understanding, the inner light they see within themselves spreads to the distance of a yojana.
- வரி 4Line 4
அந்த ஒளிமயமான வெள்ளி அறையாகிய மனத்தில் பயத்திற்கு இடமிருக்காது.
In that luminous silver chamber that is the mind, there is no room for fear.
திருமந்திரம் பாடல் #611





