தொடர்ந்து படிக்கread this section continuously
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கிஅதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.
உரைmeaning
தியானத்தால், உடலில் அடங்கியிருக்கும் ஆறினுள் தோன்றும் ஐந்து வகை அக்கினிகள் பிரகாசிக்கும்போது, மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருள்கள் நீங்கும். அதன்பின், சுவைத்தல், பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடுதல் ஆகிய ஆளும் ஐந்து புலன்களின் பற்றும் நீங்கப்பெறும்; அப்படி நீங்கப் பெற்றால் சிவபெருமானை அடையலாம்.
Through meditation, when the five kinds of fire that arise within the six that lie folded in the body shine forth, the darkness of the three impurities, egoism, karma and illusion, departs. After that, the hold of the five ruling senses, tasting, seeing, hearing, smelling and touching, is also removed, and, so freed, one may reach Lord Shiva.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தியானத்தால், உடலில் அடங்கியிருக்கும் ஆறினுள் தோன்றும் ஐந்து வகை அக்கினிகள் பிரகாசிக்கும்,
Through meditation, the five kinds of fire that arise within the six that lie folded in the body shine forth,
- வரி 2Line 2
அப்போது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருள்கள் நீங்கும்.
and then the darkness of the three impurities, egoism, karma and illusion, departs.
- வரி 3Line 3
அதன்பின் சுவைத்தல், பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடுதல் ஆகிய ஆளும் ஐந்து புலன்களின் பற்றும் நீங்கப்பெறும்.
After that, the hold of the ruling five senses, tasting, seeing, hearing, smelling and touching, is also removed.
- வரி 4Line 4
அப்படி நீங்கப் பெற்றால் சிவபெருமானை அடையலாம்.
And, so freed, one may reach Lord Shiva.
திருமந்திரம் பாடல் #610





