திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 607

தொடர்ந்து படிக்கread this section continuously

கடலொடு மேகங் களிறொடும் ஓசைஅடவெழும் வீணையும் அண்டரண் டத்துச்சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசைதிடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

உரை

கடலின் அலையோசை, மேகத்தின் இடியோசை, யானை பிளிறும் ஓசை ஆகிய வன்மையான ஓசைகளில் ஆரம்பித்து, வீணையின் ஓசையும், அண்டமெல்லாம் கலந்திருக்கும் ஓம் எனும் ஓசையும், புல்லாங்குழலின் மெல்லிய ஓசையும், சிறிய துளையுடைய சங்கொலியும் ஆகிய மென்மையான ஓசைகளில் முடியும் இந்த ஓசைகளை, மன உறுதியோடு தியானம் செய்யும் யோகியர்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    கடலின் அலையோசை, மேகத்தின் இடியோசை, யானை பிளிறும் ஓசை ஆகிய வன்மையான ஓசைகளில் ஆரம்பித்து,

  • வரி 2

    வீணையின் ஓசையும், அண்டமெல்லாம் கலந்திருக்கும் ஓம் எனும் ஓசையும்,

  • வரி 3

    புல்லாங்குழலின் மெல்லிய ஓசையும், சிறிய துளையுடைய சங்கொலியும் ஆகிய மென்மையான ஓசைகளில் முடியும்.

  • வரி 4

    இந்த ஓசைகளை மன உறுதியோடு தியானம் செய்யும் யோகியர்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.

திருமந்திரம் பாடல் #607

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout