திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 606

தொடர்ந்து படிக்கread this section continuously

மணிகடல் யானை வளர்குழல் மேகம்அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

உரை

தியானம் செய்வதால் உள்ளுக்குள் கேட்கக்கூடிய பத்துவித ஓசைகளாகிய மணியோசை, கடல் அலையோசை, யானை பிளிறும் ஓசை, புல்லாங்குழலோசை, இடியோசை, வண்டின் ரீங்கார ஓசை, தும்பியின் முரலோசை, சங்கொலி, பேரிகை ஓசை, யாழிசை ஆகிய ஓசைகள் அனைத்தும், சிவனைப் பணிந்து தியானம் செய்பவர்களுக்கு மட்டுமே உருவாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    மணியோசை, கடல் அலையோசை, யானை பிளிறும் ஓசை, புல்லாங்குழலோசை, இடியோசை,

  • வரி 2

    வண்டின் ரீங்கார ஓசை, தும்பியின் முரலோசை, சங்கொலி, பேரிகை ஓசை, யாழிசை ஆகிய,

  • வரி 3

    உள்ளுக்குள் எழுந்தடங்கும் இந்தப் பத்து ஓசைகளும்,

  • வரி 4

    சிவனைப் பணிந்து தியானம் செய்பவர்களுக்கு மட்டுமே உருவாகும்.

திருமந்திரம் பாடல் #606

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout