தொடர்ந்து படிக்கread this section continuously
நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்பயனிது காயம் பயமில்லை தானே
உரைmeaning
இரண்டு கண்களையும் புருவ மத்தியிலுள்ள மூக்கின்மேல் வைத்து, உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விடாமல் அடக்கி வைத்து, கருமங்களால் வரும் உடல் மற்றும் மனத் துன்பங்கள் நீங்க வேண்டித் தியானம் செய்தால், அதன் பயனாக உடலுக்குத் துன்பம் எதுவும் வராது; மனத்தில் எந்தப் பயமும் இருக்காது.
Placing both eyes upon the nose at the centre of the brows, holding the breath drawn inward without letting it out, one who meditates so that the bodily and mental sufferings born of past deeds may depart will, as the fruit of it, meet with no suffering in the body, and there will be no fear at all in the mind.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இரண்டு கண்களையும் புருவ மத்தியிலுள்ள மூக்கின்மேல் வைத்து,
Placing both eyes upon the nose at the centre of the brows,
- வரி 2Line 2
உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விடாமல் அடக்கி வைத்து,
holding the breath drawn inward without letting it out,
- வரி 3Line 3
கருமங்களால் வரும் உடல் மற்றும் மனத் துன்பங்கள் நீங்க வேண்டித் தியானம் செய்தால்,
one who meditates so that the bodily and mental sufferings born of past deeds may depart,
- வரி 4Line 4
அதன் பயனாக உடலுக்குத் துன்பம் எதுவும் வராது; மனத்தில் எந்தப் பயமும் இருக்காது.
will, as the fruit of it, meet with no suffering in the body, and no fear at all in the mind.
திருமந்திரம் பாடல் #605





