திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 603

தொடர்ந்து படிக்கread this section continuously

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லைஉண்ணாடியில் உள்ளே ஒளிபெற நோக்கில்கண்ணாடியில் போலக் கலந்துநின் றானே.

உரை

எண்ணிலடங்காத ஆண்டுகள் யோக நிலையில் இருந்தாலும், இறைவனை வெளியே கண்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. உள்ளுக்குள் இருக்கும் சகஸ்ரதளத்திலுள்ள ஒளியின்மேல் எண்ணத்தை வைத்துத் தியானித்தால், கண்ணாடியில் உருவம் கலந்திருப்பது போல, உள்ளுக்குள் கலந்திருக்கும் இறைவனை உணரலாமென்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    எண்ணற்ற ஆயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தாலும்,

  • வரி 2

    கண்குளிரக் காணத்தக்க அமுதத்தைக் கண்டறிந்தவர் இல்லை.

  • வரி 3

    உள்ளிருக்கும் ஆடியில், ஒளிபெற உள்நோக்கினால்,

  • வரி 4

    கண்ணாடியில் உருவம் கலந்திருப்பது போல, அவன் கலந்து நின்றிருப்பதைக் காணலாமென்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #603

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout