திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 602

தொடர்ந்து படிக்கread this section continuously

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கிஅனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்டமனத்து விளக்கது மாயா விளக்கே.

உரை

தியானத்தின் மூலம் மனதில் இருக்கும் ஒளியைப் பிரகாசமாக மேல் நோக்கிச் செலுத்தி, கோபமாகிய அக்கினியை வெளியே போகும்படிச் செய்து, அனைத்தையும் அறிந்திருக்கும் சிவ ஒளியைப் பற்றியிருக்கும் சுழுமுனை என்னும் திரியைத் தியானத்தின் மூலம் தூண்டிவிட்டால், மனதில் இருக்கும் சிவம் என்னும் ஒளி அணையாமல் இருக்குமென்கிறது பாடல்.

வரி வாரியாக

  • வரி 1

    மனத்தில் இருக்கும் விளக்கை மாண்புற ஏற்றி வைத்து,

  • வரி 2

    சினமாகிய விளக்கைச் செல்லுமாறு நெருக்கி,

  • வரி 3

    மற்ற அனைத்து விளக்குகளையும் ஒரே திரியாகத் தூண்டினால்,

  • வரி 4

    மனத்தில் இருக்கும் அந்த விளக்கு அணையாத விளக்கு ஆகுமென்கிறது பாடல்.

திருமந்திரம் பாடல் #602

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout