தொடர்ந்து படிக்கread this section continuously
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரைஒருபொழு துன்னார் உயிருட் சிவனைஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையைஒருபொழு துன்னார் சந்திரப் பூவையே.
உரைmeaning
உடலோடு கலந்துள்ள உயிரை ஒரு பொழுதும் நினைக்காதவர்கள், உயிருக்கு உயிராய் இருக்கும் சிவனை ஒரு பொழுதும் நினைக்காதவர்கள். சிவனை ஒரு பொழுதும் நினைக்காதவர்கள், சிவனின்மேல் சிந்தனையை ஒரு பொழுதும் வைக்காதவர்கள். சிவனின்மேல் சிந்தனையை வைக்காதவர்கள், நெற்றிக்கு நடுவில் உள்ள சக்தியை ஒரு பொழுதும் உணரவே மாட்டார்கள் என்கிறது பாடல்.
Those who never dwell in thought upon the life joined with the body never dwell in thought upon Sivan, who is life to that life. Those who never dwell in thought upon Sivan never set their thinking upon Sivan. Those who never set their thinking upon Sivan, the verse says, will never sense the power that dwells at the centre of the brow.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒரு பொழுதும் உடலோடும் உயிரோடும் இருந்து நினையாதவர்கள்,
Those who never dwell in thought, at any time, upon the body and the life joined with it,
- வரி 2Line 2
ஒரு பொழுதும் உயிருக்குள் இருக்கும் சிவனை நினையாதவர்கள்,
those who never dwell in thought upon the Sivan who dwells within that life,
- வரி 3Line 3
ஒரு பொழுதும் சிவன் உறையும் சிந்தையை நினையாதவர்கள்,
those who never dwell in thought upon the mind where Sivan himself dwells,
- வரி 4Line 4
ஒரு பொழுதும் நெற்றியிலுள்ள சந்திரப் பூவை உணரமாட்டார்கள் என்கிறது பாடல்.
the verse says, will never, at any time, sense the moon-flower at the brow.
திருமந்திரம் பாடல் #601





