தொடர்ந்து படிக்கread this section continuously
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்கூடிக் கொளிறில்கோல அஞ்செழுத் தாமே.
உரைmeaning
முறைப்படி பிராணாயாமம் செய்பவர்களுக்கு ஆரம்பகாலத்தில், உடலை இடமாகக் கொண்டிருக்கும் இடகலை பிங்கலை ஆகிய பிராண சக்திகள் பன்னிரண்டு அங்குல அளவிற்கு உள்ளே வந்தும் வெளியே சென்றும் இருக்கும். பிற்காலத்தில் அந்த சக்திகள் இரண்டும், தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை உள்ள நான்கு அங்குல அளவிற்குச் செல்லாமல், கழுத்துக்குக் கீழே எட்டு அங்குல அளவிற்கு மட்டுமே சென்றுகொண்டிருக்கும். தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை உள்ள அந்த இடத்திற்கும் மூச்சுக்காற்று செல்லுமாறு, மொத்தம் பன்னிரண்டு அங்குல அளவிற்கும் பிராணாயாமம் செய்பவர்கள், பஞ்சாக்கர மந்திரத்தின், அதாவது நமசிவாயவின், வடிவமாக மாறுவார்கள்.
In the early period for those who perform pranayama in the proper way, the two vital forces, ida and pingala, which have the body as their place, move in and out to the extent of twelve inches. In a later period, those two forces no longer reach the four inches from the throat cavity up to the crown of the head, and move only within the eight inches below the neck. Those who perform pranayama so that the breath reaches all the way to that place, from the throat cavity to the crown of the head, that is, to the full twelve inches, become the very form of the Panchakshara mantra, Namasivaya.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
முறைப்படி பிராணாயாமம் செய்பவர்களுக்கு ஆரம்பகாலத்தில், உடலை இடமாகக் கொண்டிருக்கும் இடகலை பிங்கலை ஆகிய பிராண சக்திகள்
In the early period for those who perform pranayama in the proper way, the two vital forces, ida and pingala, which have the body as their place,
- வரி 2Line 2
பன்னிரண்டு அங்குல அளவிற்கு உள்ளே வந்தும் வெளியே சென்றும் இருக்கும்.
move in and out to the extent of twelve inches.
- வரி 3Line 3
பிற்காலத்தில் அந்த சக்திகள் இரண்டும், தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை உள்ள நான்கு அங்குல அளவிற்குச் செல்லாமல், கழுத்துக்குக் கீழே எட்டு அங்குல அளவிற்கு மட்டுமே சென்றுகொண்டிருக்கும்.
In a later period, those two forces no longer reach the four inches from the throat cavity up to the crown of the head, and move only within the eight inches below the neck.
- வரி 4Line 4
தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை உள்ள அந்த இடத்திற்கும் மூச்சுக்காற்று செல்லுமாறு, மொத்தம் பன்னிரண்டு அங்குல அளவிற்கும் பிராணாயாமம் செய்பவர்கள், பஞ்சாக்கர மந்திரத்தின், அதாவது நமசிவாயவின், வடிவமாக மாறுவார்கள்.
Those who perform pranayama so that the breath reaches all the way to that place, from the throat cavity to the crown of the head, that is, to the full twelve inches, become the very form of the Panchakshara mantra, Namasivaya.
திருமந்திரம் பாடல் #576





