தொடர்ந்து படிக்கread this section continuously
புறப்பட்டுப் புக்குத் திரியும் வாயுவைநெறிப்படவே உள்ளே நின்மல மாக்கில்உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
உரைmeaning
வெளியில் சுற்றித் திரியும் பிராணவாயுவைப் பிராணாயாம முறைப்படி உள்ளே இழுத்து வைத்திருந்தால், அந்தக் காற்று உள்ளே சுத்தமாகிவிடும். முறைப்படி பிராணாயாமத்தைச் செய்பவரின் உள்ளத்தில் இருக்கும், கயிறு போல் முறுக்கிய சடையணிந்த சிவபெருமான், வெளியே சென்றுவிடாமல் இருப்பான்.
If the vital breath that wanders about outside is drawn in and held within, in the manner of pranayama, that breath becomes pure within. And Sivan, whose matted locks are twisted like a rope, who dwells in the heart of the one who performs pranayama in this proper way, will not go forth from there.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
வெளியில் சுற்றித் திரியும் பிராணவாயுவைப் பிராணாயாம முறைப்படி உள்ளே இழுத்து வைத்திருந்தால்,
If the vital breath that wanders about outside is drawn in and held within, in the manner of pranayama,
- வரி 2Line 2
அந்தக் காற்று உள்ளே சுத்தமாகிவிடும்.
that breath becomes pure within.
- வரி 3Line 3
முறைப்படி பிராணாயாமத்தைச் செய்பவரின் உள்ளத்தில் இருக்கும்,
Sivan, who dwells in the heart of the one who performs pranayama in this proper way,
- வரி 4Line 4
கயிறு போல் முறுக்கிய சடையணிந்த சிவபெருமான், வெளியே சென்றுவிடாமல் இருப்பான்.
whose matted locks are twisted like a rope, will not go forth from there.
திருமந்திரம் பாடல் #575





