திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 572

மூன்றாம் தந்திரம்5. பிராணாயாமம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்பாலாம் இரேசகத் தானுட் பதிவித்துமாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவேஆலாலம் உண்டானின் அருள்பெற லாமே.

உரை

தலை, கண், காதுகள், கழுத்து வரை உள்ளவை மேல் பகுதி ஆகும். கழுத்திலிருந்து அடிவயிறு வரை, நெஞ்சு, தொப்புள் முதலானவை நடுப் பகுதி ஆகும். அடிவயிறு முதல் கால் பெருவிரல் வரை உள்ளவை கீழ் பகுதி ஆகும். பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றைப் பூரக முறைப்படி உள்ளிழுத்து, அந்தக் காற்றைக் கும்பக முறைப்படி உள்ளே அடக்கி வைத்து, மேலே கூறிய மூன்று பகுதிகளுக்கும் அந்த மூச்சுக்காற்றைச் செலுத்தி, அவை மூன்றிற்குள்ளும் நிறையும்படி வைத்திருந்தால், நாம் செய்யும் தீய செயல்களால் வரும் கருமவினையாகிய நஞ்சை அழித்து நம்மைக் காப்பாற்றும்; சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    தலை, கண், காதுகள், கழுத்து வரை உள்ளவை மேல் பகுதி ஆகும். கழுத்திலிருந்து அடிவயிறு வரை, நெஞ்சு, தொப்புள் முதலானவை நடுப் பகுதி ஆகும். அடிவயிறு முதல் கால் பெருவிரல் வரை உள்ளவை கீழ் பகுதி ஆகும்.

  • வரி 2

    பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றைப் பூரக முறைப்படி உள்ளிழுத்து,

  • வரி 3

    அந்தக் காற்றைக் கும்பக முறைப்படி உள்ளே அடக்கி வைத்து, மேலே கூறிய மூன்று பகுதிகளுக்கும் அந்த மூச்சுக்காற்றைச் செலுத்தி, அவை மூன்றிற்குள்ளும் நிறையும்படி வைத்திருந்தால்,

  • வரி 4

    நாம் செய்யும் தீய செயல்களால் வரும் கருமவினையாகிய நஞ்சை அழித்து நம்மைக் காப்பாற்றும்; சிவபெருமானின் அருளையும் பெறலாம்.

திருமந்திரம் பாடல் #572

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout