தொடர்ந்து படிக்கread this section continuously
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லைகாற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்கூற்றை யுதைக்குங் குறியுமது வாமே.
உரைmeaning
பிராணாயம முறைப்படி பூரக முறையில் மூச்சுக்காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்து, இரேசக முறையில் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விட்டு, கும்பக முறையில் வயிற்றில் அடக்கி வைத்திருக்கும் அளவுகளைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு மூன்று முறைகளின்படி மூச்சுக்காற்றை இழுத்து அடக்கி வெளியே விடும் அளவுகளைத் தெரிந்தவர்களுக்கு, எமனையே காலால் எட்டி உதைக்கும் ஆற்றல் உண்டாகும்.
There is no one who knows the measures of pranayama: drawing the breath in through the left nostril by pooraka, releasing it slowly through the right nostril by rechaka, and holding it in the belly by kumbhaka, these measures no one knows. But to those who do know the measures of drawing in, holding and releasing the breath by these three methods, the power comes to kick even Yama, the lord of death, with their own foot.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பிராணாயம முறைப்படி பூரக முறையில் மூச்சுக்காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்து, இரேசக முறையில் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விட்டு,
There is no one who knows the measures of pranayama: drawing the breath in through the left nostril by pooraka, releasing it slowly through the right nostril by rechaka,
- வரி 2Line 2
கும்பக முறையில் வயிற்றில் அடக்கி வைத்திருக்கும் அளவுகளைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.
and holding it in the belly by kumbhaka, these measures no one knows.
- வரி 3Line 3
அவ்வாறு மூன்று முறைகளின்படி மூச்சுக்காற்றை இழுத்து அடக்கி வெளியே விடும் அளவுகளைத் தெரிந்தவர்களுக்கு,
But to those who do know the measures of drawing in, holding and releasing the breath by these three methods,
- வரி 4Line 4
எமனையே காலால் எட்டி உதைக்கும் ஆற்றல் உண்டாகும்.
the power comes to kick even Yama, the lord of death, with their own foot.
திருமந்திரம் பாடல் #571





