திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 570

மூன்றாம் தந்திரம்5. பிராணாயாமம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எங்கே இருக்கினும் பூரி இடத்திலேஅங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லைஅங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்சங்கே குறிக்கவும் தலைவனு மாமே.

உரை

எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடத்திலேயே பிராணாயாம முறைப்படி இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மூச்சுக்காற்றை இழுத்துப் பூரகம் செய்து, அப்படி இழுத்த மூச்சுக்காற்றைக் கும்பக முறைப்படி அடக்கி வைத்து, இரேசக முறைப்படி அளவாக வெளியே விட்டால், உள்ளுக்குள் ஓங்காரமாகிய ஓம் எனும் ஒலி கேட்டு மேன்மையை அடையலாம்.

வரி வாரியாக

  • வரி 1

    எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடத்திலேயே பிராணாயாம முறைப்படி இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மூச்சுக்காற்றை இழுத்துப் பூரகம் செய்து,

  • வரி 2

    அப்படி இழுத்த மூச்சுக்காற்றைக் கும்பக முறைப்படி அடக்கி வைத்து,

  • வரி 3

    இரேசக முறைப்படி அளவாக வெளியே விட்டால்,

  • வரி 4

    உள்ளுக்குள் ஓங்காரமாகிய ஓம் எனும் ஒலி கேட்டு மேன்மையை அடையலாம்.

திருமந்திரம் பாடல் #570

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout