திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 518

இரண்டாம் தந்திரம்19. திருக்கோயிலிழிவு

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்னவ னார்கோயிற் பூசைகள் முட்டிடின்மன்னர்க்குத் தீங்குள வாரி வளங் குன்றுங்கன்னங் களவு மிகுந்திடுங் காசினியென்னருமை நந்தி யெடுத்துரைத் தானே.

உரை

அனைத்திற்கும் முதலாய் இருக்கும் இறைவன் கோவில்களில் தினந்தோறும் நடக்கும் பூஜைகள் தடைப்பட்டால், அந்த நாட்டை ஆளும் மன்னனுக்குத் தீமைகள் உண்டாகும். மழை இல்லாமல் நீர் குறைந்து நாட்டின் வளம் குன்றும். பொறி வைத்துத் திருடும் திருடர்கள் அதிகரித்துக் களவு பெருகும். இவ்வாறு உலகத்தில் நடக்கும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்திற்கும் முதலாய் இருக்கும் இறைவன் கோவில்களில் தினந்தோறும் நடக்கும் பூஜைகள் தடைப்பட்டால்,

  • வரி 2

    அந்த நாட்டை ஆளும் மன்னனுக்குத் தீமைகள் உண்டாகும்; மழை இல்லாமல் நீர் குறைந்து நாட்டின் வளம் குன்றும்.

  • வரி 3

    பொறி வைத்துத் திருடும் திருடர்கள் அதிகரித்துக் களவு பெருகும்.

  • வரி 4

    இவ்வாறு உலகத்தில் நடக்கும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.

திருமந்திரம் பாடல் #518

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout