தொடர்ந்து படிக்கread this section continuously
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றேசீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.
உரைmeaning
தான் ஒரு அந்தணன் என்று பெயரை மட்டும் கூறிக்கொண்டு, சிவபெருமானிடம் அன்பும் சிவனைப் பற்றிய அறிவும் ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக்கோயிலில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்தால், அக்கோயில் உள்ள நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும் வெளிநாட்டுப் போர்களும் நடப்பதோடு, அந்நாட்டில் கொடிய நோய்களும் விவசாய நிலங்களில் ஒன்றும் விளையாமல் பஞ்சமும் உண்டாகும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.
If a brahmin who only claims the name, holding no love for Shiva, no knowledge of Shiva, no conduct, performs the worship of Shiva in the temple, the land where that temple stands will suffer internal strife and wars from outside, and that land will suffer harsh diseases and famine, with nothing growing in its farmlands, declared God, who stands to us as guru.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தான் ஒரு அந்தணன் என்று பெயரை மட்டும் கூறிக்கொண்டு, சிவபெருமானிடம் அன்பும் சிவனைப் பற்றிய அறிவும் ஒழுக்கமும் இல்லாத அந்தணன்,
A brahmin who only claims the name, holding no love for Shiva, no knowledge of Shiva, no conduct,
- வரி 2Line 2
திருக்கோயிலில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்தால்,
if he performs the worship of Shiva in the temple,
- வரி 3Line 3
அக்கோயில் உள்ள நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும் வெளிநாட்டுப் போர்களும் நடக்கும்.
the land where that temple stands will suffer internal strife and wars from outside.
- வரி 4Line 4
அந்நாட்டில் கொடிய நோய்களும் விவசாய நிலங்களில் ஒன்றும் விளையாமல் பஞ்சமும் உண்டாகும் என்று எமது குருவாய் இருக்கும் இறைவன் எடுத்துரைத்தான்.
And that land will suffer harsh diseases and famine, with nothing growing in its farmlands, declared God, who stands to us as guru.
திருமந்திரம் பாடல் #519





