தொடர்ந்து படிக்கread this section continuously
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
உரைmeaning
ஒரு திருக்கோயிலில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுத்துக்கொண்டு போய், வேறொரு திருக்கோயிலில் நிறுவினால், அச்செயல் அந்த வேறொரு திருக்கோயில் கட்டி முடிப்பதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும். அந்தச் செயலைச் செய்தவன் இறப்பதற்கு முன்பு தொழுநோய் வந்து துன்புற்று இறப்பான். இவ்வாறு எம் உயிர்க் காவலனாகிய நந்திபெருமான் உறுதிபடக் கூறினார்.
If one uproots a self manifest Shiva linga in a temple and installs it in another temple, that act will topple the rule of the king even before that other temple is finished being built. The one who did that will suffer from leprosy before he dies, dying in torment. So did Nandi Perumaan, guardian of our life, declare with certainty.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒரு திருக்கோயிலில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுத்துக்கொண்டு போய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால்,
If one uproots a self manifest Shiva linga in a temple and installs it in another temple,
- வரி 2Line 2
அச்செயல் அந்த வேறொரு திருக்கோயில் கட்டி முடிப்பதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும்.
that act will topple the rule of the king even before that other temple is finished being built.
- வரி 3Line 3
அந்தச் செயலைச் செய்தவன் இறப்பதற்கு முன்பு தொழுநோய் வந்து துன்புற்று இறப்பான்.
The one who did that will suffer from leprosy before he dies, dying in torment.
- வரி 4Line 4
இவ்வாறு எம் உயிர்க் காவலனாகிய நந்திபெருமான் உறுதிபடக் கூறினார்.
So did Nandi Perumaan, guardian of our life, declare with certainty.
திருமந்திரம் பாடல் #515





