திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 405

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறைமஞ்சார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்துக்கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்துமைந்தார் பிறவியை அமைந்துநின் றானே.

உரை

சிவந்த தாமரை மலரின் நிறத்தைப் போன்ற பிரம்மனும், கொழுந்துவிட்டு எரியும் தீப்பிழம்பின் நிறத்தைக் கொண்ட எமது இறைவன் சிவபெருமானும், நீர் நிறைந்த மேகங்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட திருமாலும் சேர்ந்து, மாயையால் பாசப் பிணைப்புகளை உண்டாக்கி உயிர்களை மயக்கி, பூக்களைத் தங்களது கூந்தலில் சூடியிருக்கின்ற பெண்கள் கூட்டத்துடன் ஆண்களைக் கூடுமாறு செய்து, அவர்களின் கூடுதலில் பிறவியை அமைத்து நிற்கின்றான் இறைவன்.

வரி வாரியாக

  • வரி 1

    சிவந்த தாமரை மலரின் நிறத்தைப் போன்ற பிரம்மனும், கொழுந்துவிட்டு எரியும் தீப்பிழம்பின் நிறத்தைக் கொண்ட எமது இறைவன் சிவபெருமானும்,

  • வரி 2

    நீர் நிறைந்த மேகங்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட திருமாலும் சேர்ந்து, மாயையால் பாசப் பிணைப்புகளை உண்டாக்கி உயிர்களை மயக்குகின்றனர்.

  • வரி 3

    பூக்களைத் தங்களது கூந்தலில் சூடியிருக்கின்ற பெண்கள் கூட்டத்துடன் ஆண்களைக் கூடுமாறு செய்கின்றனர்.

  • வரி 4

    அவர்களின் கூடுதலில் பிறவியை அமைத்து நிற்கின்றான் இறைவன்.

திருமந்திரம் பாடல் #405

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout