திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 404

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்ஒருவனு மேஉல கேழும் அளித்தான்ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்ஒருவனு மேஉட லோடுயிர் தானே.

உரை

ஏழு உலகங்களையும் படைக்கின்ற பிரம்மனாகவும், ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமாலாகவும், ஏழு உலகங்களையும் அழிக்கின்ற சிவபெருமானாகவும் இருப்பவன் இறைவன் ஒருவனே. சதாசிவமூர்த்தியாக இருந்து ஒவ்வொரு உயிரின் உடலோடும் உயிராகக் கலந்திருப்பவனும் இறைவன் ஒருவனே.

வரி வாரியாக

  • வரி 1

    ஏழு உலகங்களையும் படைக்கின்ற பிரம்மனாக இருப்பவன் இறைவன் ஒருவனே.

  • வரி 2

    ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமாலாக இருப்பவனும் இறைவன் ஒருவனே.

  • வரி 3

    ஏழு உலகங்களையும் அழிக்கின்ற சிவபெருமானாக இருப்பவனும் இறைவன் ஒருவனே.

  • வரி 4

    சதாசிவமூர்த்தியாக இருந்து ஒவ்வொரு உயிரின் உடலோடும் உயிராகக் கலந்திருப்பவனும் இறைவன் ஒருவனே.

திருமந்திரம் பாடல் #404

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout