திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 403

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்சென்றங் கியங்கி அரன்திரு மாலவன்மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்என்றிவ ராக இசைந்துஇருந் தானே.

உரை

அசையா சக்தியும் அசையும் சக்தியும் சேர்ந்த ரூபமாய் அருளல் தொழிலைச் செய்யும் சிவனின் அம்சம் முழுவதும் நிறைந்து, தாமாகவே சதாசிவனிடமிருந்து தோன்றியவர் மறைத்தல் தொழில் செய்யும் மகேஸ்வரன். இவரே காத்தலையும் அழித்தலையும் செய்யும் உருத்திரனாகவும் இருந்து, திருமாலின் செயல்களுக்கு இயக்கமாகவும் இருக்கிறார். திருமாலின் தொப்புள்க் கொடியிலிருந்து வெளிவந்த தாமரை மலரின்மீது உருவானவர், அனைத்தையும் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மன் ஆவார். ஆகவே இந்த ஐந்து தேவர்களாகவும், அசையா சக்தியான இறைவன் ஒருவனே ஒவ்வொருவருடனும் ஒவ்வொருவராகக் கலந்திருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    அசையா சக்தியும் அசையும் சக்தியும் சேர்ந்த ரூபமாய் அருளல் தொழிலைச் செய்யும் சிவனின் அம்சம் முழுவதும் நிறைந்து, தாமாகவே சதாசிவனிடமிருந்து தோன்றியவர் மறைத்தல் தொழில் செய்யும் மகேஸ்வரன்.

  • வரி 2

    இவரே காத்தலையும் அழித்தலையும் செய்யும் உருத்திரனாகவும் இருந்து, திருமாலின் செயல்களுக்கு இயக்கமாகவும் இருக்கிறார்.

  • வரி 3

    திருமாலின் தொப்புள்க் கொடியிலிருந்து வெளிவந்த தாமரை மலரின்மீது உருவானவர், அனைத்தையும் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மன் ஆவார்.

  • வரி 4

    ஆகவே இந்த ஐந்து தேவர்களாகவும், அசையா சக்தியான இறைவன் ஒருவனே ஒவ்வொருவருடனும் ஒவ்வொருவராகக் கலந்திருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #403

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout