திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 402

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலிகாரண காரிய மாகக் கலந்தவள்வாரணி ஆரணி வானவர் மோகினிபூரணி போதஅதி போதமு மாமே.

உரை

சூரிய சந்திரனை மார்புக் கச்சையாகச் சூடியிருக்கும் சிவனின் சக்தியான மனோன்மணி மங்கள சொரூபமானவள். அவளே அனைத்திற்கும் காரணமாகிய அசையாத சக்தியான இறைவனுடன் அசையும் சக்தியாகவும், உலகக் காரியங்களைச் செய்யும் சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகியோருடன் காரிய சக்திகளாகவும் கலந்து நிற்கின்றாள். அவளே ஓங்கார வடிவாகவும், அழிக்கும் தொழிலில் வாரணியாகவும், படைக்கும் தொழிலில் ஆரணியாகவும் இருக்கின்றாள். காக்கும் தொழிலில் வானவர் கொண்டாடும் மோகினியாகவும், மறைக்கும் தொழிலில் பூரணியாகவும் பேரறிவாக இருக்கின்றாள்.

வரி வாரியாக

  • வரி 1

    சூரிய சந்திரனை மார்புக் கச்சையாகச் சூடியிருக்கும் சிவனின் சக்தியான மனோன்மணி மங்கள சொரூபமானவள்.

  • வரி 2

    அவளே அனைத்திற்கும் காரணமாகிய அசையாத சக்தியான இறைவனுடன் அசையும் சக்தியாகவும், உலகக் காரியங்களைச் செய்யும் சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகியோருடன் காரிய சக்திகளாகவும் கலந்து நிற்கின்றாள்.

  • வரி 3

    அவளே ஓங்கார வடிவாகவும், அழிக்கும் தொழிலில் வாரணியாகவும், படைக்கும் தொழிலில் ஆரணியாகவும் இருக்கின்றாள்.

  • வரி 4

    காக்கும் தொழிலில் வானவர் கொண்டாடும் மோகினியாகவும், மறைக்கும் தொழிலில் பூரணியாகவும் பேரறிவாக இருக்கின்றாள்.

திருமந்திரம் பாடல் #402

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout