தொடர்ந்து படிக்கread this section continuously
அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்அளியார் திரிபுரை யாம்அவள் தானேஅளியார் சதாசிவ மாகி அமைவாள்அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.
உரைmeaning
பரவிந்து, அபரநாதம், அபரவிந்து என்னும் மூன்று முக்கோணம் போன்ற ஒளியும் ஒலியுமான அசையும் சக்தியின் மையப்பகுதியிலிருந்து, திரிபுரை என்னும் பெயருடைய சக்தி தோன்றுவாள். அவளே சதாசிவமூர்த்தியின் தொழிலைச் செயல்படுத்துவாள். அவளது மாபெரும் கருணையினால், சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகிய ஐந்து மூர்த்திகளின் சக்தியாக உடன் இருந்து, அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்வாள்.
From the centre of Para bindu, Apara nadam, and Apara bindu, the three that are like a triangle of light and sound, the moving Shakti, there arises the Shakti named Tripurai. She herself carries out the work of Sadashiva. Through her great compassion, she stays as the Shakti alongside the five forms, Shiva, Maheshwara, Rudra, Vishnu and Brahma, and performs all five tasks, bestowing grace, concealing, destroying, protecting, and creating.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பரவிந்து, அபரநாதம், அபரவிந்து என்னும் மூன்று முக்கோணம் போன்ற ஒளியும் ஒலியுமான அசையும் சக்தியின் மையப்பகுதியிலிருந்து, திரிபுரை என்னும் பெயருடைய சக்தி தோன்றுவாள்.
From the centre of Para bindu, Apara nadam, and Apara bindu, the three that are like a triangle of light and sound, the moving Shakti, there arises the Shakti named Tripurai.
- வரி 2Line 2
அவளே சதாசிவமூர்த்தியின் தொழிலைச் செயல்படுத்துவாள்.
She herself carries out the work of Sadashiva.
- வரி 3Line 3
அவளது மாபெரும் கருணையினால், சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகிய ஐந்து மூர்த்திகளின் சக்தியாக உடன் இருப்பாள்.
Through her great compassion, she stays as the Shakti alongside the five forms, Shiva, Maheshwara, Rudra, Vishnu and Brahma.
- வரி 4Line 4
அருளல், மறைத்தல், அழித்தல், காத்தல், படைத்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்வாள்.
And she performs all five tasks, bestowing grace, concealing, destroying, protecting, and creating.
திருமந்திரம் பாடல் #401





