திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 400

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகாய மாதி சதாசிவ ராதியென்போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.

உரை

ஆகாயம், நீர், நெருப்பு, காற்று, மண் ஆகிய பஞ்சபூதங்களும், சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகிய பஞ்சதெய்வங்களும், என்றும் அழியாத மாபெரும் சக்தியினுள்ளிருந்தே தோன்றியவர்களாகும். பஞ்சதெய்வங்களில் உருவமில்லாமல் அருவமாக முதலில் தோன்றிய சிவனிடமிருந்து தூல உருவமுள்ள மகேசுவரன் தோன்றி, மகேசுவரனிடமிருந்து உருத்திரன் தோன்றி, உருத்திரனிடமிருந்து திருமால் தோன்றி, திருமாலிடமிருந்து பிரம்மன் தோன்றினான். அதுபோலவே பஞ்சபூதங்களில் உருவமில்லாத அருவமாக முதலில் தோன்றிய ஆகாயத்திலிருந்து சூட்சும உருவமான வாயு தோன்றி, வாயுவிலிருந்து தூல உருவமான நெருப்பு தோன்றி, நெருப்பிலிருந்து நீர் தோன்றி, நீரிலிருந்து நிலம் தோன்றியது. இவை அனைத்தும் சேர்ந்தே உலகம் என்ற பொருள் தோன்றி, கண்ணால் காண முடியும்படி அளிக்கப்பட்டது.

வரி வாரியாக

  • வரி 1

    ஆகாயம், நீர், நெருப்பு, காற்று, மண் ஆகிய பஞ்சபூதங்களும், சிவன், மகேசுவரன், உருத்திரன், திருமால், பிரம்மன் ஆகிய பஞ்சதெய்வங்களும், என்றும் அழியாத மாபெரும் சக்தியினுள்ளிருந்தே தோன்றியவர்களாகும்.

  • வரி 2

    பஞ்சதெய்வங்களில் உருவமில்லாமல் அருவமாக முதலில் தோன்றிய சிவனிடமிருந்து தூல உருவமுள்ள மகேசுவரன் தோன்றி, மகேசுவரனிடமிருந்து உருத்திரன் தோன்றி, உருத்திரனிடமிருந்து திருமால் தோன்றி, திருமாலிடமிருந்து பிரம்மன் தோன்றினான்.

  • வரி 3

    அதுபோலவே பஞ்சபூதங்களில் உருவமில்லாத அருவமாக முதலில் தோன்றிய ஆகாயத்திலிருந்து சூட்சும உருவமான வாயு தோன்றி, வாயுவிலிருந்து தூல உருவமான நெருப்பு தோன்றி, நெருப்பிலிருந்து நீர் தோன்றி, நீரிலிருந்து நிலம் தோன்றியது.

  • வரி 4

    இவை அனைத்தும் சேர்ந்தே உலகம் என்ற பொருள் தோன்றி, கண்ணால் காண முடியும்படி அளிக்கப்பட்டது.

திருமந்திரம் பாடல் #400

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout