தொடர்ந்து படிக்கread this section continuously
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்மற்றைய மூன்றுமா மாயோ தயம்விந்துபெற்றவள் நாதம் பரையிற் பிறத்தலால்துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.
உரைmeaning
மாயையாகிய சக்தியிலிருந்து சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூன்றும் தோற்றுவிக்கப்படுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களும் சுத்த மாயையின் தொழிலாகும். இந்த மாயைகளைத் தாண்டி ஒலியும் ஒளியும் இருக்கின்றன. இவை இரண்டும் அசையும் சக்தியாகிய பரையிடமிருந்து பிறப்பதால், இவை அனைத்தும் அசையாத சக்தியாகிய பரம்பொருள் சதாசிவமூர்த்தியின் திருவிளையாடலால் உருவானவையே ஆகும்.
From Shakti, who is maya, the three, pure maya, impure maya, and prakriti maya, are brought forth. The three tasks of creation, protection and destruction are the work of pure maya. Beyond these mayas stand sound and light. Because these two are born from Para, the moving Shakti, all of them are themselves brought into being by the sacred play of the Supreme, the unmoving Shakti that is Sadashiva.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மாயையாகிய சக்தியிலிருந்து சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூன்றும் தோற்றுவிக்கப்படுகின்றன.
From Shakti, who is maya, the three, pure maya, impure maya, and prakriti maya, are brought forth.
- வரி 2Line 2
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களும் சுத்த மாயையின் தொழிலாகும்.
The three tasks of creation, protection and destruction are the work of pure maya.
- வரி 3Line 3
இந்த மாயைகளைத் தாண்டி ஒலியும் ஒளியும் இருக்கின்றன; இவை இரண்டும் அசையும் சக்தியாகிய பரையிடமிருந்து பிறக்கின்றன.
Beyond these mayas stand sound and light; these two are born from Para, the moving Shakti.
- வரி 4Line 4
இவை அனைத்தும் அசையாத சக்தியாகிய பரம்பொருள் சதாசிவமூர்த்தியின் திருவிளையாடலால் உருவானவையே ஆகும்.
All of them are themselves brought into being by the sacred play of the Supreme, the unmoving Shakti that is Sadashiva.
திருமந்திரம் பாடல் #399





