தொடர்ந்து படிக்கread this section continuously
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
உரைmeaning
உலகத்தை அழிக்கும் உருத்திரனும், சங்கு சக்கரத்தைத் தரித்துக் காக்கின்ற திருமாலும், தாமரை மலரின்மேல் அமர்ந்து படைக்கின்ற பிரம்மனும், தாங்கள் செய்யவேண்டியது என்ன என்பதைத் தமக்குள் புகுந்து தம்மோடு கலந்து நிற்கும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியை உணர்ந்து அறிந்துகொள்வதால், பரம்பொருளின் விருப்பத்தைச் செயலாக்கும் கருவிகளாகவே இவர்கள் மூவரும் இருக்கின்றார்கள்.
Rudra who destroys the world, Vishnu who bears the conch and the discus and protects it, and Brahma who sits on the lotus flower and creates it, all three come to know what they must do only by realizing and knowing the Supreme, the form of Sadashiva who has entered into them and stays mingled within them. So all three of them are only the instruments through which the will of the Supreme is carried out.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகத்தை அழிக்கும் உருத்திரன், தான் செய்யவேண்டியது என்ன என்பதைத் தனக்குள் புகுந்து தன்னோடு கலந்துநிற்கும் சதாசிவமூர்த்தியை உணர்ந்து அறிந்துகொள்கின்றான்.
Rudra who destroys the world comes to know what he must do only by realizing the Sadashiva who has entered into him and stays mingled within him.
- வரி 2Line 2
சங்கு சக்கரத்தைத் தரித்துக் காக்கின்ற திருமாலும், அப்படியே தனக்குள் புகுந்து கலந்துநிற்கும் சதாசிவமூர்த்தியை உணர்ந்தே தான் செய்யவேண்டியதை அறிந்துகொள்கின்றான்.
Vishnu, who bears the conch and the discus and protects the world, likewise comes to know what he must do only by realizing the Sadashiva who has entered into him and stays mingled within him.
- வரி 3Line 3
தாமரை மலரின்மேல் அமர்ந்து படைக்கின்ற பிரம்மனும் இதே வண்ணமே தன்னுள் புகுந்திருக்கும் பரம்பொருளை உணர்ந்து அறிந்துகொள்கின்றான்.
Brahma too, who sits on the lotus flower and creates, comes to know it in this very same way, by realizing the Supreme who has entered within him.
- வரி 4Line 4
இப்படி மூவரும் தமக்குள் புகுந்து கலந்துநிற்கும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியை உணர்ந்து அறிந்துகொள்வதால், பரம்பொருளின் விருப்பத்தைச் செயலாக்கும் கருவிகளாகவே இருக்கின்றார்கள்.
So all three of them, by realizing and knowing the Supreme, the Sadashiva who has entered and stays mingled within them, are only the instruments through which the will of the Supreme is carried out.
திருமந்திரம் பாடல் #397





